

செஸ் ஒலிம்பியாட்டை துவக்கிவைக்க சென்னை வருகை புரிந்த பிரதமர் மோடி ,முதல்வர் ஸ்டாலின் இருவம் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட நிலையில் திமுக- பாஜக கூட்டணி என பேசப்பட்ட து அதற்கு முதல்வர் ஸ்டாலின் முற்றிபுள்ளி வைத்துள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். பின்னர், கருத்தரங்கில் பங்கேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளித்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில், சிபிஎம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த நட்பு ஆட்சியிலும் கட்சியிலும் எப்படி இருக்கிறது என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி, இலட்சியக் கூட்டணி என்றார்.
சிபிஎம்-ஐ பொறுத்தவரை அக்கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன் நேரிலும் எங்களை பார்த்து இப்பிரச்னைகள் எல்லாம் இருக்கிறது, இப்படி செய்ய வேண்டும் என்று கருத்துகளை சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், நானும் சில விஷயங்களை அவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செய்து கொண்டு இருக்கிறோம். அதையும் தாண்டி பல கருத்துகளை சிபிஎம் அதிகாரபூர்வமான பத்திரிகையான “தீக்கதிர்” பத்திரிகையில், அவ்வப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்கிறோம். ஆக எங்களுடைய கொள்கை கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது தொடரும்.” இவ்வாறு பதில் அளித்தார்.
