அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்து நிறுவிய தொலைநோகியின் அன்னை, அமெரிக்க வானியலாளர் நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம் இன்று (மே 16, 1925).
நான்சி கிரேசு உரோமன் (Nancy Grace Roman) மே 16, 1925ல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார். இவரது தாயார் இசையாசிரியர் ஜார்ஜியா சுமித் உரோமன். தந்தையார் இர்வின் உரோமன். உரோமன் பிறந்த்தும் அவரது தந்தையின் பணிக்காக குடும்பம் ஓக்லகோமாவுக்கு இடம்பெயர்ந்தது. பின்னர், உரோமனும் அவரது பெற்றோரும் அவுசுட்டன், நியூஜெர்சி, மிச்சிகானுக்குத் தொடர்ந்து இடம்பெயர்ந்தனர். 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாழ்சிங்டன் டி. சி. நகரில் வாழ்ந்தார். இவர் தனது அறிவியல் ஆர்வத்தைப் பெற்றோரே ஊட்டியதாக்க் கருதுகிறார். தன் பணிக்கு அப்பால், அமெரிக்கப் பல்கலைக்கழக மகளிர் கழகத்தில் முனைவாகச் செயல்பட்டு விரிவுரைகளுக்கும் இசைக் கச்சேரிகளுக்கும் சென்றார். உரோமன் தன் பதினொறாம் அகவையிலேயே வானியலில் ஆர்வம் கொள்ளத் தொடங்கி ஒரு வானியல் குழுவையும் உருவாக்கியுள்ளார். இவரும் இவரது வகுப்பு மாணவரும் ஒன்றாகச் சேர்ந்து வாரம் ஒருமுறை நூல்களைப் படித்து விண்மீன்குழுக்களைப் பற்றிப் பயின்றுள்ளனர். இவரது அர்வத்தைத் தடுக்க முயன்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே வானியலில் தேர்ச்சிப்பெற முடிவு செய்துவிட்டார். இவர் பால்டிமோரில் உள்ள வெசுட்டர்ன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து விரைவுப் பாடத்திட்டத்தில் சேர்ந்து மூன்றாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
உரோமன் 1946ல் சுவார்த்மோர் கல்லூரியில் சேர்ந்து வானியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் அங்கு படிக்கும்போது சுப்பிரவுல் வான்காணகத்திலும் பணி செய்தார். இதற்குப் பிறகு தன் வானியல் முனைவர் பட்டத்துக்காக சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1946ல் சேர்ந்தார். அங்கு அவர் ஆற்றாண்டுகள் தங்கி, யெர்க்கேசு வான்காணகத்திலும் டெக்சாசில் உள்ள மெக்டொனால்டு வான்காணகத்திலும் பணிபுரிந்தபடி, டபுள்யூ.டபுள்யூ. மார்கனிடம் ஆராய்ச்சி உதவியாளராகவும் இருந்தார். அந்த ஆராய்ச்சி இருக்கை நிலையானதாக இ;ல்லாததால் இவர் அங்கு பயிற்றுநராகச் சேர்ந்துப் பின்னர் பேராசியரின் உதவியாளராகவும் இருந்தார். அக்காலத்தில் பெண்கள் ஆராய்ச்சியில் ஈடுபட உரிய காலம் தரப்படாததால் பல்கலைக்கழக வேலையைத் துறந்தார். இவர் 1980 முதல் 1988 வரை சுவார்த்மோர் கல்லூரியில் மேலாளர்களில் ஒருவராகத் தொடர்ந்தபோதும் தன் ஆராய்ச்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார். சூரியனை வட்டணையில் சுற்றும் வான்காணகப் படிமத்துடன் நான்சி உரோமன் சிகாகோ பல்கலைக்கழக யெர்க்கேசு வான்காணகம் விட்டகன்றதும் நாவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சேர்ந்து கதிர்வானியல் திட்டத்தில் பணிபுரியலானார். இங்கு வெப்பம்சாரா கதிர்வீச்சு வாயில்களின் கதிர்நிரல்களிலும் புவிவடிவ அளக்கைப் பணியிலும் ஈடுபட்டார். இதில் இவர் நுன்னலை கதிர்நிரலியல் பிரிவின் தலைமையை ஏற்றார்.
ஆரி யூரேவின் விரிவுரையைக் கேட்டுக்கொண்டிருந்த்போது ஜேக் கிளார்க் இவரிடம் வந்து எவராவது அங்குள்ளவர்களில் நாசாவில் விண்வெளி வானியல் திட்டத்தில் சேர ஆர்வமுடன் உள்ளனரா எனக் கேட்டுள்ளார். அந்த இருக்கைக்கு இவர் மட்டுமே ஏற்பு தெரிவித்துள்ளார். நாசாவில் விண்வெளி அறிவியல் அலுவலகத்தில் முதல் வானியல் தலைவராகச் சேர்ந்துள்ளார். இவ்ர் அந்த்த் திட்டத்தை வடிவமைத்து விண்வெளி முகமையில் செயல் அலுவலர் பதவியை ஏற்ற முதல் பெண்மணியும் இவரேயாவார். இவர் அப்பணி தொடர்பாக நாடு முழுவதும் சுற்றி அனைத்துப் வானியல் துறைகளுடனும் விவாதம் நடத்தினார். அப்போது அவர்களிடம் திட்டம் உருவாக்கத்தில் உள்ளதாகவும் அதில் மேலும் எவற்றை சேர்க்கலாம் என வினவியுள்ளார். இவர் நாசாவில் வானியலுக்கும் சூரிய இயற்பியலுக்கும் தலைவராக 1961 முதல் 1963 வரை பணியாற்றினார். வானியலுக்கும் பொது சார்பியலுக்க்ம் தலைவராக இருந்தமை உட்பட, இவர் நாசாவில் பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர் நாசாவில் பணிபுரிந்தபோது, பல்வேறு திட்டங்களை உருவாக்கி உரிய பாதீடுகளும் பெற்று அறிவியல் பங்களிப்பாளரையும் அணிதிரட்டினார். இவர் வட்டணையில் சுற்றிவரும் மூன்று சூரிய நோக்கீட்டகங்களையும் மூன்று சிறிய வானியல் செயற்கைக்கோள்களையும் ஏவும்பணியில் பங்கேற்றுள்ளார். இவை சூரிய, வான்வெளி, விண்வெளி நோக்கிடுகளுக்காக புற ஊதாக்கதிர், X-கதிர் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தினார். இவர் ஆழ்சு திக்சனுடன் இணைந்து ஒளி, புற ஊதாக்கதிர் அளவீடுகளைப் பயன்படுத்திய வட்டணையில் சுற்றிவரும் வான்காணகங்களை ஏவும்பணியையும் மேற்பார்வையிட்டுள்ளார். மேலும் இவர் புவிப்புற அளக்கைச் செயற்கைக்கோள்களை ஏவுதலிலும் ஈடுபட்டுள்ளார். அதோடு, இவர் வானியல் ஏவூர்தித் திட்டம், உயர் ஆற்றல் வான்காணகங்கள், சார்பியல் ஈர்ப்புச் செம்பெயர்ச்சியை அளப்பதற்கான சுகவுட் ஆய்கலத் திட்டம் போன்ற சிறிய திட்டங்களையும் விண்ணாய்வகத் திட்டம், ஜெமினித் திட்டம், அப்பொல்லோத் திட்டம் வான்வெளி ஆய்வகத் திட்டம் ஆகியவற்றின் செய்முறைகளையும் திட்டமிடலிலும் பங்கேற்றுள்ளார். இவர் ஜேக் ஓல்ட்சுடன் இணைந்து சிறு வானியல் செயர்கைக்கோளிலும் பரோபிரிட்ஜுடன் இணைந்து விண்வெளித் தொலைநோக்கியிலும் பணிபுரிந்துள்ளார்.
இவர் கடைசியாக, அபுள் தொலைநோக்கித் திட்டக் குழுவை உருவாக்கித் தானும் அதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பணியாற்றியுள்ளார். இவர் அத்திட்டத்தைத் தொடக்கநிலையில் திட்டமிடலிலும் அதன் செயல்பாட்டுக் கட்டமைப்பினை வரையறுப்பதிலும் பெரும்பங்காற்றியுள்ளார். இவரது இந்த பங்களிப்புக்காக “அபுள் தொலைநோக்கியின் அன்னை” எனப் பராட்டப்படுகிறார். இவருடன் விண்வெளி முகமையில் பணிசெய்த நாசாவின் நடப்பு முதன்மை வானியலாளர் இவரைப் பற்றி “அபுள் தொலைநோக்கியின் அன்னை” என வியந்து பாராட்டுகிறார். அபுள் தொலைநோக்கியில் வேலைசெய்யும் இன்றைய இளந்தலைமுறை வானியலாளர்கள் இவரது பணியை மறந்துவிட்டனர், என எடு வீலர் மேலும் கூறுகிறார். இந்த இணைய ஊழியில் பெரும்பாலானவை மறக்கப்பட்டதை எண்ணி வருத்தப்படவேண்டியுள்ளது. இணையமும் கூகிளும் மின்ன்ஞ்சலும் வருவதற்கு முந்தைய பழைய காலத்திலேயே நான்சி அபுள் விண்வெளித் தொலைநோக்கித் திட்டத்தை ஏற்கவைத்து, வானியலாரை அணிதிரட்டி,அதற்கான அரசின் பாதீட்டைப் பெறவும் வழிவகுத்துள்ளார்.
இவர் நாசாவில் இருபத்தியோராண்டுகள் பணிக்குப் பிறகும் 1997 வரை தொடர்ந்து கோடார்டு விண்வெளி பரப்பு மையத்தின் வேலைகளுக்கு ஆதரவு நல்கிய ஒப்பந்தக்கார்ர்களுக்காகப் பணிபுரிந்துள்ளார். இவர் ஓ.ஆர்.ஐ. குழுமத்துக்கு 1980 முதல் 1988 வரை அறிவுரைஞராகப் பணிஒபுரிந்துள்ளார். மற்ற பெரும்பாலான பெண் அறிவியலாரைப் போலவே இவரும் ஒரு பெண் அறிவியலாளராகப் பல சிக்கல்களைச் சந்தித்துள்ளார். இவர் வானியல் பணி ஆற்றுவதையே சுற்றியிருந்தவர் விரும்பவில்லை. இவரது தளராத ஊக்கத்திக் குலைத்தனர். மேலும் அப்போது நாசாவில் இவரைப் போல மேலண்மை இருக்கையில் இருந்தவர் மிகச் சிலரே. பெண்களுக்கு ஏற்படும் மேலாண்மைச் சிக்கல்களை அறிய இவர் மிச்சிகனிலும் பென்சுடேட்டிலும் நிகழ்ந்த “மேலாண்மையில் பெண்கள்” பயிற்சித் திட்ட்த்தில் கலந்துகொண்டார். அந்த திட்டங்கள் பெண்களின் ஆர்வங்களைப் பேசினவே தவிர, மேலாண்மையில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை அலசவில்லை எனத் தன் 1980 ஆண்டைய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது தொடக்க கால வெளியீடுகள் இவர் யெர்க்கேசு, மெக்டொனால்டு வான்கானகங்களில் வேளை செய்த பிறகு, 1955 ஆண்டில் வானியற்பியல் இதழில் குறைநிரப்பு வரிசையாக வெளியாகின. இவை உயர்விரைவு விண்மீன்கள் வரிசைத் தொகுப்பு அட்டவணை சார்ந்தனவாக அமைந்தன. இவர் ஏறத்தாழ, 600 உயர்விரைவு விண்மீன்களை ஆய்வு செய்து அவற்றின் பான்மைகளை ஆய்வுக் கட்டுரைகளாக எழுதினார். அப்பான்மைகள் “ஒளிமின் பருமைகளின் கதிர்நிரல் வகைகள், வண்ணங்கள், கதிர்நிரலியல் இடமாறு தோற்றப் பிழைகள் என்பனவாகும். நீரகமும் எல்லியமும் அடங்கிய விண்மீன்கள் உயர்தனிமங்கள் அடங்கிய விண்மீன்களைவிட வேகமாக நகர்வதைக் கண்டுபிடித்தார். பொதுவாக அமையும் எல்லா விண்மீன்களும் ஒரே காலத்தவயல்ல என்பதையும் கண்டுபிடித்தார். இதை விண்மீன்களின் தாழ்விரவல் கதிர்நிரல்கள் கொண்ட நீரக வரிகளை வைத்து கண்டுபிடித்து நிறுவினார்.
வலிமையான வரிகள் கொண்ட விண்மீன்கள் பால்வழி மையம் நோக்கி இயங்குவதையும் பிற விண்மீன்கள் பால்வெளித் தளத்துக்கு வெளியே விலகி நீள்வட்ட வடிவத்தில் இயங்குவதையும் கண்ணுற்றார். இவர் 1875 ஆண்டு இருப்பில் இருந்த விண்மீன்குழுக்களின் இருப்புகளைக் கண்டறிந்து அதைப் பற்றி எழுதி வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரையில் அவற்றின் இருப்புக்களை கண்டறியும் முறையை விளக்கியுள்ளார். இதை பேரியல் அர்சா விண்மீன் குழு பற்ரிய தன் முனைவர் பட்ட ஆய்வுரையிலும் குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்த நான்சி கிரேசு உரோமன் டிசம்பர் 25, 2018ல் தனது 93வது அகவையில் மேரிலாந்து, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.