மின்சுற்று விதி, நிறப்பிரிகை மற்றும் வெப்பக் கதிர்வீச்சு விதி ஆராய்ச்சி செய்த குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் பிறந்த தினம் இன்று (மார்ச் 12, 1824).
குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் (Gustav Robert Kirchhoff) மார்ச் 12,1824ல் கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கோயின்க்ஸ்பேர்க்கில் கல்வி கற்றார். பிறகு அல்பெனிய பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1833 ஆம் ஆண்டில் கோனிஸ்ஸ்பெர்க் நகரில் ஒரு கணித-இயற்பியல் கருத்தரங்கை பிரான்சு நியூமன் மற்றும் ஜாகோபி ஆகியோருடன் இணைந்து உருவாக்கியதுடன், அவர்களது மாணவர்கள் ஆராய்ச்சியின் முறைகள் அறிமுகப்படுத்தினர். கிர்ஹோஃப் 1843 முதல் 1846 வரை நியூமன்-ஜாகோபிய கருத்தரங்கில் கலந்து கொண்டார். 1847ல் கோன்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் கணித-இயற்பியலில் பட்டம் பெற்றார்.
கிர்ச்சாஃப் பிரஸ்லாவ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். வேதியியல் களத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். கோனிஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ் பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21 வயதில் வெளியிட்டார். இது மின்னோட்டம், மின்னழுத்தம், மின்சார நெட்வொர்க்குகளில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றை கணக்கிடப் பயன்பட்டது. கிர்க்காஃபின் விதிகள் (Kirchhoff’s circuit laws) மின்சுற்றுகளில் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு:
கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி
எந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகை, வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும். [அல்லது] ஒரு மின்சுற்றில், எந்தவொரு சந்திப்பிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழியாகும். இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:
கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி
ஒரு மூடப்பட்ட தடத்தைச் சுற்றி விழும் மின்னழுத்த வேறுபாடுகளின் கூட்டுத்தொகை சுழியாகும். இது ஆற்றல் அழியாமையின் விளைவாகும்.
ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து நிறமாலையியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 1854-ல் இருவரும் இணைந்து சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தனர். இவை மின் பொறியியல் துறைக்கு மிகவும் பயன்படும் தனிமங்களாகத் திகழ்கின்றன. மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857-ல் முதன்முதலாக கண்டறிந்து கூறினார். வெப்ப வேதியியல் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பொருட்களில் வெப்ப மாறுபாடுகளால் உண்டாகும் வேதி வினை குறித்து ஆராய்ந்தவர். 1859-ல் வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். ஒரு பொருளில் இருந்து அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுகிறது என்பதை விளக்கினார். இதை 1861ல் நிரூபித்தார்.
தன் மீது விழும் அனைத்து மின்காந்தக் கதிர்வீச்சையும் ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடைய ‘கரும்பொருள்’, கதிர்வீச்சின் நிறமாலைக்கு ஏற்ப வெப்பத்தை உமிழ்கிறது எனக் கண்டறிந்தார். இதற்கு ‘கரும்பொருள் கதிர்வீச்சு’ என்ற பதத்தை 1862ல் முதன்முதலாக பயன்படுத்தினார். இவரது இந்த ஆய்வுகள் குவான்டம் விசையியல் துறை உருவாக வழிவகுத்தது. கணித இயற்பியல் துறையில் இவரது விரிவுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 4 தொகுதிகள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது. சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக ‘ரூம்ஃபோர்டு’ பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம், பெல்லோவ் ஆஃப் ராயல் சொசைட்டி எடின்பர்க் (1868) உள்ளிட்ட பல பரிசுகளை வென்றார்.
மின்சுற்று விதி, நிறப்பிரிகை மற்றும் வெப்பக் கதிர்வீச்சு விதி ஆராய்ச்சி செய்த குஸ்டவ் ராபர்ட் கிர்ச்சாஃப் அக்டோபர் 17, 1887ல் தனது 67வது அகவையில், பெர்லினில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனில் உள்ள பள்ளம் கிர்க்காஃப் என்று பெயரிடப்பட்டது. சுயசரிதைகள் பட்டியலில் 90 வது இடம் பிடித்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.