மர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் முன்வைத்த அமெரிக்க கணிதவியலாளர், வானியலாளர் பெர்சிவால் இலாரன்சு உலோவெல் பிறந்த நாள் இன்று (மார்ச் 13, 1855).
பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) மார்ச் 13, 1855ல் மசாசூசட்டின் கேம்பிரிட்ஜ் நகர் ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தையார் அபாட் இலாரன்சு, தாயார் அமி உலோவெல் சகோதரர் உலோவெலின் ஆவார். இவர் செவ்வாயில் கால்வாய்கள் அமைந்துள்ளன எனக் கூறினார். இவர் அரிசோனாவில் உள்ள பிளாகுசுடாஃபில் உலோவெல் வான்காணகத்தை நிறுவினார் . இது இவர் இறந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு புளூட்டோவைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கி வைத்தது. நிபிரு (Nibiru) என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் (Hubble) என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்புக் கோள் ஆகும். இருப்பினும் இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரு கோளானது பிளானட் எக்சு (Planet-X) எனவும் அறியப்படுகிறது. இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 இல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்பட்டது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர்.
மர்மக் கிரகம் (Planet X) எனவும் அழைக்கப்படும் இது சூர்யக் குடும்பத்தில் உள்ள தேடப்படும் கிரகமாகும்.
இது நெப்டியூன் கிரகத்தைத் தாண்டி (புளூட்டோ தவிர்த்து) இருக்கிறது. மர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் பெர்சிவால் உலோவெல்) 1846ஆம் ஆண்டு முன் வைத்தார். யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்கள் சில சமயங்களில் தன் ஓடுபாதையிலிருந்து சிறிது விலகி பயனிக்கிறது. இந்நிகழ்வு வேறொரு கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசையால் நிகழ்கிறது என்று அனுமானித்தார். இதற்கு வியாழன் அளவு நிறை இருக்கலாம். இக்கிரகம் உண்மையில் இருந்தால் கூட, இது சூரியனைச் சுற்றி வர 1000 ஆண்டுகள் ஆகலாம். அதனால் இதைத் தேடி தொலைநோக்கியைத் திருப்ப வேண்டுமென்றால் எல்லாப் பக்கத்திலும் எல்லாக் கோணங்களிலும் வைக்க வேண்டும்.
இந்த இடத்தில் தான் இது தற்போது கடந்திருக்கிறது என வைத்துக்கொண்டால் அக்கிரகம் மீண்டும் அந்த இடத்திற்கு வர மீண்டும் 1000 ஆண்டுகள் ஆகும். இதுதான் மர்மக் கிரகம் கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம். புளூட்டோவின் உலோவெல் வட்டாரம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது. உலோவெல் நவம்பர் 12, 1916ல் தனது 61 அகவையில் பிளகுசுடாஃப், அரிசோனா, ஐக்கிய அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.