தமிழகத்தில் நூலகங்கள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள நூலகர் மற்றும் தகவல் அலுவலர்களுக்கான 35 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பணிக்கு கலந்த மார்ச் 1ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கணினி வழியில் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த நூலகர் பணிக்கான எழுத்து தேர்வின் விடை குறிப்பு தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்ஸி அறிவித்துள்ளது.
இதனை தேர்வர்கள் www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் மூலமாக தங்களின் பதிவு எண்களை உள்ளிட்டு விடை குறிப்பை பார்த்துக் கொள்ளலாம். இந்த விடை குறிப்பில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அதனை தேர்வர்கள் மே 26 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.