• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ட்விட்டருக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராமில்..,குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்..!

Byவிஷா

May 20, 2023

ட்விட்டருக்கு போட்டியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் புதிய தலத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த செயலி மூலமாக மெசேஜ் செய்யும் அம்சம் இருந்தாலும் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செயலியாகவே இன்ஸ்டாகிராம் அறியப்படுகிறது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் கைப்பற்றியதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது ட்விட்டருக்கு போட்டியாக குறுஞ்செய்திகளை அனுப்பும் புதிய தலத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இதன் ஆரம்பகட்ட பயன்பாடு முயற்சியில் நிபுணர்கள் மற்றும் சில பயனர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலமாக பயனர்கள் 1500 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்து கொள்ள முடியும் எனவும் செய்திகளின் இணைப்புகளையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.