• Thu. Mar 28th, 2024

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாணம்

Byகாயத்ரி

Jan 18, 2022

கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருக பக்தர்களால் முருகனின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தைப்பூசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இதையடுத்து சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து இன்று அதிகாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு மேல் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வருந்தார்.இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.

இதில், அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். தேரை கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆதிவாசிகள் வடம் பிடித்து இழுக்கின்றனர். பின்னர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக கோவிலை சுற்றி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *