• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முதல் படை வீட்டில் ஆனி ஊஞ்சல் திருவிழா நிறைவு..,

ByKalamegam Viswanathan

Jun 30, 2026

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடான
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ‌உற்சவர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தெய்வயானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். ‌இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜைகள் சுவாமிக்கு முக்கனிகள் மா,பலா,வாழை பழங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னர் மாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சிம்மாசனம் வாகனத்தில் எழுந்தருளி திருப்பரங்குன்றம் முக்கிய ரத வீதிகளின் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று பௌர்ணமி நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து மலையை சுற்றி கிரிவலம் சென்று வழிபட்டனர்.