• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்த் வாக்களிக்காததுக்கு இதுதான் காரணம்!

கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் விரும்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆளும் கட்சி ஆண்ட கட்சி வாக்காளர்களுக்கு பணம், கொலுசு, டிபன் பாக்சை கொடுத்து வருகின்றனர். நியாயமான தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும் என்றும், கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.