• Wed. Apr 24th, 2024

வேலூர் கோட்டையைப் பிடிப்பது யார் ? அதிமுகவா… திமுகவா..

Byமதன்

Feb 19, 2022

வெள்ளையனே வெளியேறு என்று சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் சுமார் 60 வார்டுகள் அமைந்துள்ளது சுதந்திரத்திற்கு வித்திட்ட மாவட்டமான வேலூர் மாநகராட்சி ஆக இருக்க வேண்டும் என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மூலம் நகராட்சியாக இருந்த வேலூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த 60 வார்டுகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.வேலூரில் மக்களுடைய அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை. புகார்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் மத்தியில் மட்டுமே அல்லது மாவட்ட ஆட்சியர் இடமே புகார்கள் வந்தன.

ஆனால் மீண்டும் திமுக ஆட்சியை பிடித்த பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கட்டாயம் நடத்தவேண்டும் என்ற முடிவில் அதன்படி பிப் 19 இன்று தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இதில் திமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் அதிமுக சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வார்டு உறுப்பினராக களத்தில் இறங்கினர் அப்படி களத்தில் இறங்கியவர்கள் வேலூர் மாவட்டத்தில் சுமார் 60 வார்டுகளில் போட்டியிட செய்தனர். தேர்தல் பிரசாரத்தின் போது சாலை வசதிகள் கால்வாய் பிரச்சனைகள் குடிநீர் பிரச்சினைகள் அவ போது துண்டிக்கப்படும் மின்சார பிரச்சனைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து தேர்தலில் வாக்குறுதிகளை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அமைச்சர் துரைமுருகன் மாவட்ட செயலாளர் நந்தகுமார் இன்னும் பலர் உள்ளனர். அவர்கள் சீரிய சிந்தனையில் பல திட்டங்களையும் கொண்டு வந்த அவர்கள் முடிந்தவரை செய்து இருக்கிறார்கள். ஆனாலும் மக்களுடைய பிரச்சனை கால்வாய் பிரச்சனை குடிநீர் பிரச்சனை சாலை வசதி மின்சாரம் துண்டிப்பு இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. வார்டு கவுன்சிலர் இல்லாததால் சட்டமன்ற உறுப்பினரிடம் அந்த பிரச்சனை செல்கிறது. சட்டமன்ற உறுப்பினரும் இன்று நாளை என்று வர மறுக்கிறார்கள் என பொது மக்கள் கவலையுற்றனர்.

நமக்குத் தகுந்தவாறு வார்டு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நம்முடைய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற தளத்தில்தான் மக்களை நேசிக்கும் சிலர் தேர்தல் களத்தை இறங்கியுள்ளனர் அவருடைய வாக்குறுதிகள் நான் மாமன்ற உறுப்பினராக ஆனால் அத்தியாவசியமான பிரச்சனைகளில் முதலை தீர்ப்பை நான் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி முதல் குரல் என் குரல் இருக்கும் இல்லை என்றால் என்னை நீங்களே நீக்கி விடலாம் என்று உறுதி கொடுத்த பலருடைய வாக்குறுதிகள் மனதில் பட்டதால் குடும்பத்துடன் முதல் ஓட்டு வரை சென்று வாக்கு பதிவு செய்து உள்ளனர்.

அதேபோல் அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் காந்தி தனது வாக்கை முதலில் அவர் தொகுதிகளில் பதிவு செய்தனர் பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னுடைய வாக்குகளை பதிவு செய்தனர் பதிவு செய்தவர்கள் சற்று நேரம் கூட நிற்காமல் மக்களுடைய உரிமை அதாவது வெள்ளையனே வெளியேறு என்ற முதலில் குரல் கொடுத்த வேலூர் கோட்டையை மக்களுடைய பிரச்சினை தீர்க்க வேண்டும் அதை தீர்க்க வேண்டும் என்றால் தனக்கு தன் சேர்ந்த தொகுதிகளுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரே எண்ணம் ஒரே ஆட்சி என்ற பார்வையில் அவர்கள் வாக்குறுதிகளை சில்லறையாக சிதைத்தனர் இருந்த போதிலும் மக்கள் மக்களாக இருந்து இன்று வேலூர் மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த காட்ட வேண்டும் என்பதால் மக்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினர் அப்படி ஆற்றப்பட்ட போது புதிய வேட்பாளர்கள் பல கட்சியை சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் வயதானவர்கள் என்று தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *