• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு..,

Byமுகமதி

Jul 19, 2026

புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைவர் செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் நூலகருக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஆண் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் என மொத்தம் 759 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இன்று நடைபெறும் இந்த தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு சின்ன ராஜா மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும் செயலாளர் பொறுப்புக்கு வெங்கடேச குமார் மற்றும் சங்கர் ஆகியோரும் இணைச்செயலாளர் பொறுப்புக்கு முத்துக்குமார், வேணுகோபால், முருகேசன் ஆகியோரும் துணைத் தலைவர் பொறுப்புக்கு திலீபன் ராஜா மற்றும் பரமசிவம் ஆகியோரும் பொருளாளர் பொறுப்புக்கு ராமராஜன் மற்றும் மனோகர் ஆகியோரும் நூலகர் பொறுப்புக்கு அறிவழகன் மற்றும் கனகாம்பாள் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

சங்கப் பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் இவர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மாவட்டம் முழுவதும் உள்ள சார்பு நீதிமன்றங்களுக்கு சென்று அங்குள்ள வழக்கறிஞர்களிடம் வாக்குகள் சேகரிப்பதற்காக அவர்களை நேரடியாக சந்தித்து சால்வைகள் அணிவித்து வாக்குகள் சேகரித்தார்கள். இன்று இவர்களை தேர்வு செய்வதற்காக சங்க உறுப்பினர்கள் 759 பேரும் இன்று வாக்களித்து தேர்வு செய்ய இருக்கிறார்கள். இன்று மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.