• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் போதை பொருள் எதிரான விழிப்புணர்வு..,

BySeenu

Jul 19, 2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதனை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தனியார் அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பிரம்மாண்டமான 10 அடி உயர கால்பந்து அமைப்பை மாணவர்கள் வடிவமைத்து உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 48 நாடுகளின் கொடிகளைப் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

“இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள், போதைப்பொருட்களை அல்ல” என்பதை கருப்பொருளாக கொண்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் போதைப்பொருட்களுக்குப் பதிலாக, நோக்கம் மற்றும் ஆரோக்கியமான முயற்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் மாணவ, மாணவியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

இந்த பிரமாண்டமான கால்பந்து பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்களுக்கு இருக்கும் எனவும்,நல்ல ஒழுக்கங்களை இளம் மாணவர்களிடையே வளர்த்துவதே இதன் நோக்கம் என பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ்,தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்..