• Sun. Jun 4th, 2023

இந்த நாள்

Byகாயத்ரி

Jan 19, 2022

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று…!

தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆனவர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன். இவர் சிவசிதம்பரம், அவையாம்பாள் தம்பதிக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். தன் ஆரம்பக்கல்வியை வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழியில் முடித்தார்.அதன் பின் தனது இளமைப் பருவத்தில் பாடல் மீது கொண்ட ஆர்வத்தால் பல தியாகராஜ பாகவதர் பாடல்களை பாடியுள்ளார்.அது மட்டுமில்லமால் சென்னை இசைக்கலூரியில் இசைக்கல்வி பயின்று ஒரு நடிகராகவும் சில படங்களில் நடித்தார்.தன் முதல் படமான பொன்வயல் திரைப்படதிற்காக ‘சிரிப்புத் தான் வருகுதைய்யா’ என்ற பாடலை பாடியுள்ளார்.இவர் மேலும் சில நகைச்சுவை பாடல்களும் பாடியுள்ளார். பட்டணந்தான் போகலாமடி, மாமியாளுக்கு ஒரு சேதி , காதலிக்க நேரமில்லை, ஆசைக்கிளியே கோபமா போன்ற பாடல்கள் வித்தாயசனமான இவரது பாடல்களில் ஒன்று. சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் தன் இசைப்பணிக்காக பெற்ற விருதுகள் சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் இசைப்பேரறிஞர் விருது.பல நயம் உள்ள பாடல்களை பாடிய சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *