• Thu. Jun 1st, 2023

பண்டிதர் சவரிராயர் பிறந்த தினம் இன்று…!

Byகாயத்ரி

Jan 20, 2022

தமிழ் அறிஞரும் மொழி ஆராய்ச்சியாளருமானவர் சவரிராயர்.இவர் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், இலத்தின் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவரை பண்டிதர் சவரிராயர் எனவும் அழைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தில் பிறந்தார். இவர் தந்தை தேவசகாயம் ஒரு மருத்துவர், தாய் ஞானப்பிரகாசி அம்மாள்.

கொப்பன்பட்டியைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் செபாசுத்தியன் பிள்ளையிடம் தமிழ் படித்தார். கொல்லம் குருமடத்தில் சேர்ந்து இலத்தின் மொழியையும் மத சாத்திரங்களையும் கற்றார். பண்டிதர் சவரிராயர் தம் ஆசிரியர் பணியைத் தூத்துக்குடி தூய சவேரியார் தொடக்கப் பள்ளியில் தொடங்கினார்.பின்னர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பித்தார்.

1894 ஆம் ஆண்டில் திரிசிரபுர தூய சூசையப்பர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் சில ஆண்டுகளில் துறைத் தலைவராகவும் இருபது ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தார்.தமிழ் மீது இவர் கொண்ட ஆர்வத்தால் அதில் பல ஆராய்ச்சிகளையும் செய்தார்.

இந்திய நாடு, திராவிட இந்தியா, தமிழ் மன்னர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள தொடர்பு, ஆரியர் தமிழர் கலப்பு ஆகியன பற்றிய பல கட்டுரைகளை சவரிராயர் எழுதியுள்ளார். சவேரியார் துத்துக்குடியில் வாழ்ந்த போது உழவர் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி உழவர்களின் நன்மைக்காகவும் செயல்பட்டார். பண்டிதர் சவரிராயர் பிறந்த தினம் இன்று…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *