

நெல்லை மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில், 1931ல் பிறந்தவர், புஷ்பா தங்கதுரை இவரின் இயற்பெயர் வேணுகோபாலன். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்ச், ஹிந்தி போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் சுமார் 2 ஆயிரம் புதினங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.நாடகம், சிறுகதை, நாவல், புதினம், திரைக்கதை, கட்டுரை, ‘டிவி’ தொடர்கள் என, பல்வேறு தளங்களில் இயங்கியுள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். தன் இயற்பெயரில் சில ஆன்மிக கட்டுரைகளும் எழுதியுள்ளார்.ஹிந்து நாளிதழில் அவருடைய படைப்பை குறித்து 2005ல் வந்த மதிப்பிட்டு கட்டுரை. “மதுரகவி’ நாடகத்துக்காக மத்திய அரசின் கலாசார விருது வழங்கப்பட்டது.

‘நீ நான் நிலா, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ உட்பட இவரது பல படைப்புகள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ள்ளன. இவரது கதைகள் படங்களாகவும், ‘டிவி’ தொடர்களாகவும் வெளிவந்துள்ளன.’ஊதாப்பூ, ஆன்மிகம்’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தன் 82வது வயதில் இயற்கை எய்தினார்.அவர் காலமான தினம் இன்று…
