

ஆந்திர மாநிலம் ஈச்சம்பட்டியில், இசையமைப்பாளர் ஜி.அஸ்வத்தாமா-வீணைக் கலைஞர் கமலா தம்பதிக்கு மகளாக, 1959 நவ., 9ல் பிறந்தவர், காயத்ரி வசந்த ஷோபா. தன் பெற்றோரிடமும், டி.எம்.தியாகராஜனிடமும் இசை பயின்றார். 1968ல், தியாகராஜ விழாவில், இவரின் முதல் மேடை கச்சேரி நடந்தது. 12வது வயதிலேயே, அகில இந்திய வானொலி நிலைய இசைக் கலைஞராக நியமிக்கப்பட்டார்.

கர்நாடக இசை கஜல், ஜாஸ், வெஸ்டர்ன், ப்யூஷன், கிராமிய இசை என, அனைத்து பாணியிலும் முத்திரை பதித்துள்ளார்.தமிழக இசை மற்றும் கவின்கலை பல்கலையின் முதலாவது துணைவேந்தராக, 2013-ல் நியமிக்கப்பட்டார். தமிழக அரசு இசைக் கல்லுாரிகளுக்கான இயக்குனர், அரசு இசைக் கல்லுாரி முதல்வராக பணியாற்றியுள்ளார்.’இசைப் பேரொளி, கலைமாமணி, சங்கீத கலாசிகாமணி, சங்கீத நாடக அகாடமி’ உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.’வீணை காயத்ரி’ என்னும் மாபெரும் கலைஞரின் பிறந்த நாள் இன்று!