• Thu. Apr 25th, 2024

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

Byp Kumar

Oct 8, 2022

மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் தெப்ப உற்சவம்விமர்சையாக நடைபெற்றது . அன்னப்பல்லக்கில் தாயார்களுடன் பெருமாள் தெப்பத்தில் வலம் வந்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் .


108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்மலையின் கள்ளழகர் திருக்கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா முக்கியமானதாகும் .
அந்த வகையில் சிறப்பு பெற்ற இவ்விழா கடந்த 27- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து தினமும் பெருமாள் தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர் .
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெற்றது . முன்னதாக வெங்கடாஜலபதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார் . அங்கு விசேஷ பூஜைகள் , தீபாராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்களின் ” கோவிந்தா ” கோஷம் முழங்கிட தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட அன்னபல்லக்கில் தாயார்களுடன் பெருமாள் எழுந்தருளினார்.
காலையில் ஒரு முறையும் , மாலையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
தெப்ப திருவிழாவை காண மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் “கோவிந்தா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *