• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

ByP.Thangapandi

May 13, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது.,

சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு யாகசாலைகள் பூஜைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.,

அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க ஓம் சக்தி பராசக்தி என கோஷங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு மந்திரங்கள் முழங்க கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.,

தொடர்ந்து ஸ்ரீ காளியம்மனுக்கு பால், தயிர்,சந்தனம்,மஞ்சள், குங்குமம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்., தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.,