• Fri. Mar 29th, 2024

தேனி: சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா

தேனி மாவட்டம், போடி தாலுகா சிலமலையில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இன்று (பிப்., 1) காலை 11 மணியளவில், தேனி மாவட்ட சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடந்தது. இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கட்சியில் இணைந்தனர். மேலும் தேனி மாவட்ட சிவசேனா கட்சி இளைஞரணி மாவட்ட தலைவராக கார்த்திக், போடி ஒன்றிய தலைவராக தினேஷ் குமார் மற்றும் செயலாளராக ஜெகன் குமார் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, தேனி மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் தலைமை வகிக்க, மாவட்ட பொதுச் செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் முருகவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முனீஸ் அபிஜித், துணைச் செயலாளர் சசிக்குமார், இணை அமைப்பாளர் நாட்ராயன், மாவட்ட செயலாளர்
ராஜேந்திரன் மற்றும் தேவாரம் பகுதி பொறுப்பாளர்களும், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:
தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும். இந்து அறநிலையத்துறைக்கு சம்பந்தமான பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் கவுரவ உயர் பதவிகள் இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். மாறாக நாத்திகவாதிகள் இடம் பெறுவதை தடுக்க வேண்டும். மேலும், தேனி மாவட்ட சுற்றுப்புற திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியார் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலங்களை மீட்டெடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும், என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *