டிஜிட்டல் நாரதர்
தமிழ்நாட்டு கிராமத்து பக்கம் சாட மாடயாக கூறுவது உண்டு. வேலை செய்யாம தாஜா பண்ற தொழிலாளி கிட்ட முதலாளி கேப்பாராம் என்னடா இப்படி வேலை பண்ணி வச்சுருக்கேன்னு, ஒரு கட்டத்துல விரக்தில உன் குடும்பத்துல இருக்குறவன் யார் கிட்டையோ கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கேன். அந்த கொடுமைக்கு தான் நீ எனக்கு வந்து தொழிலாளியா வந்து சிக்கிருக்கனு. இது போல தான் அரசியல் களம் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ,பிரச்சாரம், கூட்டணி என சூடு பறக்க சுத்திட்டு இருக்கும் போது ஒரே ஒரு பக்கம் மட்டும் அமைதியா இருக்கு. ஆமாங்க வேற யாரும் இல்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு ஜெயிலுக்கு போகும் போது கட்சியினாரால் சின்னம்மானு பேரு எடுத்தவங்களும் , ஜெயிலுக்கு சென்று பின்பு விடுதலையாகி 23 மணி நேரம் காரில் உக்காந்துகிட்டு பயணம் செய்து வந்து புரட்சித்தாய் என புரோமோசன் பெற்றவர் தான் சசிகலா நடராஜன்.
இந்த நேரத்துல இவங்களுக்கும அரசியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு அவங்க அரசியல் இருந்து விலகுறேன்னு சொல்லிடாங்க, அதுக்கு அப்புறம் எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்கனு கேக்குறீங்களா ? அங்க தான் இருக்கு இந்த டிஜிட்டல் நாரதர் சொல்லக்கூடிய ஒரு மாஸ்டர் சீக்ரெட். அதாவது இவங்க ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு உங்க எல்லாருக்கும் தெரியும் அந்த தர்ம யுத்தம் பார்ட் 1, ரிவர்ஸ் யுத்தம் பார்ட் 1 என தான் கை நீட்டியவர்கள் தங்களுக்கு எதிராக திரும்பிட்டாங்கனு அப்செட் இருந்தாங்க சசிகலா. அப்படி இருந்தவங்களுக்கு பூஸ்ட் கொடுக்குற மாதிரி அமமுக என்ற கட்சி வச்சு எல்லார் கண்ணுலையும் விரல் விட்டு ஆட்டிட்டு இருந்தாரு டிடிவி தினகரன்.
அதிமுக டு அமமுக வார் நடந்துட்டு இருந்த போது சசிகலா விடுதலையாகும் போது அதிமுகவிற்கு எந்த வித நெருக்கடியும் கொடுக்க கூடாது என டெல்லி மேலிடம் சைலன்ட் உத்தரவு போட்டாங்க. வெளிய வந்து வழக்கம் போல தங்களோட வேலைய காட்ட ஆரம்பிக்கவும் சொத்து மேல மத்திய அரசு கைய வச்சாங்க. இதுல ஆடி போனவங்க தான் அதிமுக பொதுச்செயலாளர்னு சொல்லிட்டு அறிக்கை விட ஆரம்பிச்சாங்க ஜெயலலிதா எம் ஜி ஆர் சமாதிக்கு போறதுன்னு அப்போ அப்போ வெளிய தலை காமிச்சாங்க , அப்புறம் அறிக்கை மூலமா வாழ்த்து செய்தி கொடுத்தாங்க.
இதெல்லாம் சரிங்க புரட்சித்தாயே கட்சியை எப்போ மீட்டு எடுக்கப்போறோம்னு தொண்டர்கள் எல்லாரும் பொறுமையா இருங்க , தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும்னு தல அஜித் மாதிரி அப்போ அப்போ வாட்ஸ்அப்ல மோடிவேசன் ஆடியோ ரிலீஸ் பண்ணிட்டு இருந்தாங்க.
பாஜக அதிமுக முழுவதுமா தங்களோட கட்டுப்பாட்டுல கொண்டு வர முயற்சி பண்றாங்க எதாவது பண்ணுங்க சின்னம்மானு அமமுக கட்சி காரங்க மட்டும் இல்ல, அதிமுகவினரும் கதற ஆரம்பிச்சாங்க. அப்போவும் சசிகலா அமைதியாக பொறுமையே பெருமைனு அமைதியாகிட்டாங்க. இதுனால கட்சிக்காரங்க தினகரன பார்க்க அவர் சின்னம்மாவ பார்க்க அவங்க பாயின்ட் வரட்டும் பாயின்ட் வரட்டும்னு கட்சி எதிர்காலத்தை பார்க்க. இது சரிப்பட்டு வராதுன்னு.டிடிவி தினகரன் பொறுப்புள்ள அப்பாவா அவரோட பொண்ணுக்கு கல்யாண வேலையில பிஸிஆகிட்டாரு. அந்த சின்ன இடைவெளியில கொத்து கொத்தா கட்சியில இருந்து ஆளுங்க வெளியேற ஆரம்பிச்சாங்க. சரி போறது தான் போறீங்க திமுக கட்சிக்கு போங்க அதிமுகவிற்கு வேணாம்னு எல்லாரையும் வழி அனுப்பியும் விட்டாரு. ஆனால் இவ்வளவு நடந்து எந்த வித நடவடிக்கையும் நறுக்க எடுக்க முடியாம எதுக்கு சின்னம்மா வேடிக்கை பார்க்குறாங்கனு இப்போ தான் லேசா குரல் கேட்க ஆரம்பிச்சு இருக்கு இது பெரிய குரலாக மாறுவதுக்கு முன்னரே சசிகலா ஒரு நல்ல முடிவு எடுக்கணும். நாங்க உங்க கிட்ட கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டு இருக்கோம் போல , அதுனால இப்போவும் கடலை மிட்டாய் வேண்டாம்மா கொஞ்சம் கண் திறந்து பாருங்க சின்னம்மானு கட்சியினர் கண்ணீர் மல்க கதறுகின்றனர்.