• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள் கொண்டு சென்ற வாகனத்தில் சோதனை..,

ByP.Thangapandi

Apr 15, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் ,வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கனவாய் பகுதி அருகில் உசிலம்பட்டி நிலையான கண்காணிப்பு குழு செல்வமீனாட்சி தலைமையில் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் தேனியில் இருந்து வந்த சீகுள் குளோபல் பிரீசியல் லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் பொலிரோ கார் என்ற வாகனத்தை சோதனை செய்த போது சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த சங்கரபாண்டி என்பவர் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நகை கடைகளுக்கு ரூ.10 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரத்து 821 மதிப்பிலான நகைகள் 30 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்தால் கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.