• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்..,

ByK Kaliraj

Apr 15, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுமார் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று அவர் ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலைகள் அணிவித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சடையம்பட்டியில் பிரசாரம் தொடங்கி, சத்திரப் பட்டி ஒ.மேட்டுப்பட்டி ஒத்தையால் நாரணாபுரம் இந்திராகாலனி, மேலப்புதூர் பி.லட்சுமியாபுரம், பந்துவார் பட்டி நடுச்சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். நான் சட்டமன்ற உறுப்பினரானதும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறை வேற்றப்படும் என உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து சரத்குமார் பேசியது இதைத்தொடர்ந்து ஏழாயிரம் பண்ணை பகுதியில் நடிகர் சரத்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொகுதிகளிலும் திமுக குடும்ப உறுப்பினர்கள் வேட்பாளர்களாக நிற்பார். மத்திய அரசிடம் , ஆண்டுதோறும் நிதியை பெற்று . கொண்டு மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லைஎன்று திமு.க அரசு பொய் பிரசாரம் செய்கிறது. இவரை மத்திய அரசிடம் இருந்து ரூ.11 லட்சம் கோடி தமிழக அரசு நிதி பெற்றுள்ள தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா மற்றும் போதை கலாசாரம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. சிறு வயது குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன் கொடுமைகள் தலை விரித்தாடுகிறது.

எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அ.தி. மு.க.அரசு அமைந்தால்தான் தமிழகம் சுபிட்சம் பெறும். சாத்தூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் அவர்க க்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெயலலிதாவால் தீய சத்தி என அழைக்கப்பட்ட திமுகவை புறக்கணிக்க மக்கள் தயாராக வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க அதிமுக தலைமையிலான பாரதிய ஜனதாவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் .

விலை உயர்வை கட்டுப்படுத்த அதிமுக காவல் மட்டுமே முடியும் என கூறினார்.

பிரச்சாரத்தின்போது நயினார் நாகேந்திரனுக்கு மாலை அணிவித்தும், சரத்குமாருக்கு வேல் வழங்கியும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளி்த்துள்ளனர்.