• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தேர்தல் பிரச்சாரம்..,

ByK Kaliraj

Apr 15, 2026

விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுப் பேன் என பிரசாரத்தின் போது திருச்சுழி அ. தி.மு.க. வேட்பாளர் எம். எஸ்.ஆர்.ராஜவர்மன் தெரிவித்தார்.

திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள கமலிபுளியங்குளம். முக்குளம், வீரக்குடி, , வள்ளக்குளம், மானூர், மறையூர், சேதுராயனேந்தல், மாகவேரி, முள்ளிக் கனரி, கிழவிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ. தி.மு.க வேட்பாளர் எம்.எஸ். ஆர்.ராஜவர்மன் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின் னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் எம்.எஸ்.ஆர். ராஜவர் மன் பேசியதாவது:-அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி என்னை
திருச்சுழி அ.தி.மு.க. தொகுதி வேட்பாளராக அறிவித்துள் ளார். நான் உங்களை போன்று விவசாய குடும்பத்தில் பிறந்த வன். விவசாயிகளுக்கு உள்ள அனைத்து கஷ்டங்களையும் அறிந்தவன் காரியாபட்டி, நரிக் குடி, திருச்சுழி பகுதிகளில் விளைநிலங்களில் பயிரிடப் படும் பயிர்களை காட்டுப்பன் றிகள் சேதப்படுத்தி வருகின் றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்ற னர்.விவசாயத்தை பாதுகாக்க, காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்து விவசா யிகளின் நலன் காக்க பாடுபடு வேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் கிருது மால் நதியை தூர்வார ரூ.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நதியில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வாரப் பட்டது. இதன் பின்னர்தான் கிருதுமால் நதியில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக் கப்பட்டு வீரசோழன் கிராமம் வரை தண்ணீர் சென்றது. இதன் பின்னர்தான் இந்த பகு தியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு பயிர்கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விவ சாயிகள் அ.தி.மு.க.விற்கு தங்க ளது ஆதரவை அதிகமாக தெரிவித்து வருகின்றனர்.

10 ஆண்டுகளாக தொகுதியில் அமைச்சராகவும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் திருச்சி சட்டமன்றத் தொகுதிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு எவ்வித முயற்சி செய்யவில்லை ஆகையால் இந்த முறை அதிமுகவிற்கு வாக்கு அளித்து புதிய மாற்றத்தை கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டனர். திருச்சி சட்டமன்றத் தொகுதியில் இருட்டுல சின்னத்தில் வெற்றி பெற்று வெற்றியை அதிமுக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் எடப்பாடியாரிடம் வெற்றியை சமர்ப்பிப்பேன் என கூறினார்.

இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா, சந் திரன். முன்னாள் யூனியன் துணைத்தலைவர் அம்மன் பட்டி ரவிச்சந்திரன், மாநில அண்ணா தொழிற்சங்க போக் குவரத்து பிரிவு துணை செய லாளர் விரேசன், பனைக்குடி ராஜா, நாயனேந்தல் மனோக ரன் மற்றும் கூட்டணி கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.