• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அய்யப்பன்..,

ByP.Thangapandi

Apr 15, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையபட்டி, நல்லுத்தேவன்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் பொதுமக்களிடம் தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.,

இதில் கிராம பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.,

இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் மீண்டும் உசிலம்பட்டி தொகுதிக்கு வாய்ப்பு கொடுங்கள் அனைத்து திட்டங்களையும் செய்து கொடுப்பேன் எனவும், இதில் வலையபட்டி கிராமத்தில் இளைஞர்கள் கொடுத்த புறாவை பறக்க விட்டு தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.