• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை – ப.சிதம்பரம் கருத்து

சிறு,குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி., வருமான வரி சலுகைகள் இல்லாமல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர், நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை என்று 2022-23 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக ப.சிதம்பரம் பேட்டியளித்தார். ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றுள்ளது. ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி என ப. சிதம்பரம் தெரிவித்தார்.