ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா. இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. தற்போது இவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு அருகில் புவன்ஸ் காஸ்ட்ரோ எனும் பகுதியில் பிப்ரவரி 11, 1919 அன்று பிறந்துள்ளார். இவருக்கு 7 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். ஆனால், குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே தனது மனைவி இறந்து விட்டதாக முதியவர் கூறியுள்ளார். மேலும் பிள்ளைகளை இவர்தான் வளர்த்துள்ளார்.
தற்போது இவரை ஒரு மகள் மற்றும் மகன் பராமரித்து வருகிறர்கள். இவருக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த 18 மாதங்கள் தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளார் சாசாதுர்னினோ. தற்பொழுது இவரின் 112 வயது நிறைவடைந்து உள்ளதை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.