இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு மற்றும் நாட்டில் சட்டப்பணி ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சட்டப்பணி ஆணைக்குழுவின் சார்பாக இன்று முதல் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த 40 நாட்கள் மொபைல் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி அருள்முருகன் நாகர்கோவில் நீதி மன்றத்தில் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சட்டப்பணி ஆணைக்குழு தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மொபைல் வாகனம் மூலம் சென்று மக்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிட்டு அதனுடைய தொடக்கவிழா நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைமை நீதிபதி அருள்முருகன் கொடியசைத்து மொபைல் வாகனத்தை தொடங்கி வைத்தார் கிராமங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் பெண் குழந்தைகள் உடல் நலம் எப்படி பாதுகாக்க வேண்டும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு? தொழிலாளர்கள் பிரச்சினைக்கு எந்த விதத்தில் சட்டத்தை அணுக வேண்டும் அவர்களுக்கு எப்படி ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு முகாமில் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட ஆணை பணிக்குழுவின் உடைய சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் நம்பி ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விசுவல்
- நாகர்கோவில் நீதிமன்றம் – மொபைல் வாகனம் மாவட்ட நீதி பதி கொடி அசைத்து தொடங்கி வைத்தல்.
- பேட்டி; நீதிபதி நம்பி ராஜன் ( சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் – நாகர்கோவில் நீதிமன்றம்)