• Mon. Mar 27th, 2023

பதினேழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல் சூளை உரிமையாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பதினேழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல் சூளை உரிமையாளர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன். இருபத்தி எட்டு வயதான இவர், அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

இவர், சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை மிரட்டி வந்ததாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிவசந்திரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *