• Mon. Jun 5th, 2023

செல்வ செழிப்பாக காவல் நிலையங்கள். . .கட்டப்பஞ்சாயத்து நடத்தும் காவல் உயர் அதிகாரிகள் . . .கண்டு கொள்வாரா முதல்வர்

காவல்துறை உங்கள் நண்பன்.மக்களுக்காக உழைக்க தான் ,சேவை செய்ய தான் நாங்கள் காவல் பணியில் உள்ளோம் என்று காவல்துறையினர் கூறுவது உண்டு.பழைய விஜயகாந்த் படங்களிலும் காவல்துறை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசியிருப்பார்கள்.ஆனால் உண்மையில் காவலர்கள் அப்படி உள்ளனரா ? காவல்துறையில் என்ன நடக்கிறது என்பது குறித்து பலருக்கும் இங்கு தெரிய வருவதில்லை.


கடைமட்டத்தில் இருக்கும் ஒரு காவலருக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு காவல் உயர் அதிகரிக்கும் இடையே உள்ள உறவு என்பது.கிட்ட தட்ட உயர்சாதி கீழ் சாதி போல நடத்தபடுகிறது.நாங்கள் கூறுவதை மட்டும் கேட்டால் போது நீங்களா உங்க இஷ்டத்துக்கு எதுவும் செய்ய வேண்டியது இல்லை.இது செய்ய கூடாது ,அது செய்ய கூடாது என்று அழுத்தி அழுத்தி ஒரு கட்டத்திற்கு மேல் காவல்துறையினர் தங்களது மனக்குறைகளை வாட்ஸ்அப் ஆடியோ மூலம் பரவ, அது முதல்வர் டிஜிபி ஆகியோர் காதுகளுக்கு செல்லும்.


சரி அங்கயேயாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து விட முடியாது அது மீண்டும் இந்த காவல் உயர் அதிகாரிகளிடம் வரும். மீண்டும் அவர் அதே பழிவாங்கும் நடவடிக்கையை தான் எடுப்பார். உதாரணமாக பணியிட மாறுதல் குறித்து யாராவது விருப்பம் தெரிவித்தால், அதனை கிடப்பில் போடுவது ,நடவடிக்கை எடுப்பதாக கூறி இழுத்தடிப்பது, இல்லையென்றால் அவர் கேட்டஇடம் இல்லாமல் இவராக வேற ஒரு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வது என்று பழிவாங்கி வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.


சரி காவல்துறை உயர் அதிகாரிகள் தவறு செய்கின்றனர் என்று வைத்து கொள்வோம்.இவர்கள் ஏன் குறிப்பிட்டு அந்த இடத்தில் பணி வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர் என்று கேட்க தோன்றும் அல்லவா? அது தான் இங்கு முக்கிய பிரச்சனை.ஆம் , பணியிட மாறுதலுக்காக இவர்கள் டார்கெட் செய்யும் காவல்நிலையம் நல்ல வசூல் வருகிறதா ? எவ்வளவு வசூல் வரும் என்று கணக்கிட்டு உயர் அதிகாரிகளிடம் கேட்கின்றனர்.


பணியிட மாறுதல் குறித்து எம் ஜி ஆர் ஆட்சியில் ஒரு பார்முலா பின்பற்றப்படும். வட தமிழகத்தில் இருக்கும் அதிகாரிகளை ,தென் தமிழகத்திற்கும் மாறி மாறி இடம் மாற்றப்படும். இதன் மூலம் கலவரம் நடைபெறும் போது சாதிய ரீதியான தாக்குதல்கள் குறையும் என்பது அவர்கள் ஒரு திட்டம். அது போன்ற ஒரு திட்டத்தை கையாளும் பார்முலா இங்கு குறைந்து வருவதால் தான் காவல்துறையினர் சார்ந்த பிரச்சனை எழும் போது கூடவே சாதி பிரச்சனையில் எழுகிறது.
அதிகாரிகள் முடியாது என்றதும் அமைச்சர்களிடம் சிபாரிசு பெற்று பணியிடம் மாறுதல் பெற்று செல்கின்றனர். இதையே பலரும் தொடர்ந்து செய்ய உயர் அதிகாரிகளுக்கு இது ஒரு பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது.


செல்வ செழிப்பாக உள்ள காவல்நிலையம் எதுவென்று காவலர்களுக்கு தெரியும்.அங்கு பணியிட மாற்றம் செய்ய எவ்வளவு பணம் செலவு செய்தால் அதனை எத்தனை மாதங்களில் அறுவடை செய்யலாம் என்ற கணக்கும் இவர்களுக்கு தெரியும். இதில் ஒரு பகுதியை உயர் அதிகாரிகளுக்கு நாங்கள் வழங்க தயார்.அதை வாங்கிக்கொண்டு கூட எங்களுக்குபணியிட மாற்றம் செய்யுங்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனராம்.


ஏங்க காவல்துறைக்குள்ள இப்படி எல்லாம் கூடவா செய்வாங்க என்று நீங்கள் கேட்பது புரிகிறது.இதனை ஒரு அளவுக்கு நம்பும் படியாகவே சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மதுரை யா.ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சரவணன் நான் கையூட்டு பெறமாட்டேன். எனது பெயரை பயன்படுத்தி யாரும் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் தெரிவித்து ஒரு போஸ்டர் அடித்து காவல் நிலைய வாசலில் ஓட்டியுள்ளார்.


இவரது இந்த செயல் அனைவரது மத்தியில் வரவேற்பு பெற்றாலும், இங்கு லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று கூறினால் மற்ற காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்குகின்றனரா ? என்று எழுகிறது. ஆக தற்போது காவல் நிலையத்தில் காவல்துறையினரின் நிலை இப்படி தான், கட்டப்பஞ்சாயத்து நடத்துகின்றனர்.


நாங்க 10 லட்சம் தருகிறோம் எங்களுக்கு பணியிட மாற்றம் செய்யுங்கள்.நாங்கள் அங்கு சென்றால் மூன்று மாதத்தில் அந்த பணத்தை சம்பாதித்து விடுவோம் என்று பகிர்ங்கமாக கட்டபஞ்சாயத்து நடத்துகின்றனர். இது எங்கு போய் முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படி காவல்துறையில் நடக்கும் செயல்கள் முதல்வருக்கு தெரியவருமா அதற்கு உரிய நடவடிக்கையை உயர் அதிகாரிகள் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *