இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசும் கொரோனா தடுப்பூசி செலுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரளவுவெற்றியும் பெற்றுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 140 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 76,36,569 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, 132 கோடியை தாண்டியுள்ளது. மொத்தம் 1,37,65,868 அமர்வுகள் மற்றும் முகாம்கள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 18.28 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன என்பது குறிப்பித்தக்கதாகும்.