• Sat. Oct 12th, 2024

8 பேர் அமைச்சர்கள் பட்டியல்..காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது

ByA.Tamilselvan

May 20, 2023
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.  முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுத்தது.
 இந்நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வராகவும், அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும் செய்து வைக்கிறார்.
 இந்த விழாவில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றன‌ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *