• Fri. Apr 26th, 2024

மதுரையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க 8வது மாநில மாநாடு

Byp Kumar

May 19, 2023

இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 8வது மாநில மாநாடு மதுரை உலக தமிழ் சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது,
இதில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டனர் இதில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர், மூத்த வழக்கறிஞர் வானமாமலை, முன்னாள் வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர். ஜான் செல்வராஜ் . ஆகியோரின் படங்களை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முன்னாள் நீதிபதி விமலா ஆகியோர் திறந்து வைத்தனர், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நீதிபதி ராஜா மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர்.ரகுபதி,சமூக சமத்துவ எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் உள்ளது,

எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆட்சி என்றும், தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு வாக்கு உரிமை உள்ளிட்ட சம உரிமை கொண்டு வர பாடுபட்டனர். சென்னை நீதி மன்ற தீர்ப்பு என்பது மாற்றி எழுத முடியாத தீர்ப்பு என்பதற்கு சான்று ஜல்லிக்கட்டு தீர்ப்பு எனவும்,உயர்நீதிமன்றமும் மதுரை கிளையும் இந்திய ஒன்றியத்தில் அதிகமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி முடித்து வைத்துள்ளது என்ற பெருமை உள்ளது. அதற்கு வழக்கறிஞர்கள் உங்களின் ஒத்துழைப்பும் உள்ளது எனவும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய வழக்கறிஞர் சங்க துணை தலைவர் வழக்கறிஞர்கள் சாமிதுரை, சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *