• Fri. Apr 26th, 2024

கயத்தாறில் ராஜா போடுற தான் சட்டம்! கதறும் உடன்பிறப்புக்கள்.

பாரதியார் பிறந்த மண்; கட்டபொம்மபனைத் தூக்கிலிட்ட இடம் என்று தூத்துக்குடி மாவட்டத்தை யாராலும் மறக்க முடியாது இதெல்லாம் சரித்திரங்களே! ஆனால் இந்த சரித்திரங்களை கெடுக்கும் விதமாக எங்க பேரூராட்சி தலைவரின் கணவர் செயல்படுகின்றாராங்க என்ற அவலக்குரல் கயத்தாரிலிருந்து புகராக நமது அரசியல் டுடே டாட் காமிற்கு வர உடனே அங்கே ஆஐரானோம்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள் கொண்டவை. இதற்கு பேரூராட்சி தலைவியாக சுப்புலட்சுமி (திமுக) இருந்து வருகிறார். இந்த பேரூராட்சியில் நிர்வாகம் சீர்குலைந்து இருப்பதாகவும், திறனற்ற வகையில் நடப்பதாகவும், பேரூராட்சியில் நடக்கும் ஒவ்வொரு வேளையிலும் லஞ்சப்பணம் புரழுவதாகவும் சக திமுக கவுன்சிலர்களே இதைக் கண்டு முகம் சுழிப்பதோடு மட்டுமில்லாமல் கயத்தாறே கெட்டுப்போச்சு என குற்றச்சாட்டு ஊர் முழுவதும் பேசப்பட்டு வந்தது.

சுப்புலட்சுமி
ஏன் இப்படி சொல்றீங்க இதற்கெல்லாம் காரணம் யார்? என்ற கேள்வியை முன் வைத்து உடன்பிறப்புக்கள் சிலரிடம் இது பற்றி பேசினோம்..,
நாங்க என்னத்தங்க சொல்ல என்ற ஆரம்பித்த உடன்பிறப்புக்கள் எங்க கவுர்மெண்ட் வந்துச்சு. தலைநிமிர்ந்து ஊருக்குள்ள நடக்கலாம் பாத்தா எங்க பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி கணவர் ராஜா போடற ஆட்டம் இருக்கே அப்பப்பபா.., தாங்க முடியல, மனைவி பேரூராட்சி தலைவி, அப்பா ஒன்றியச் செயலாளர் இருக்கறாதலே இந்த கயத்தாறுல ராஜா போடற தான் சட்டம். பேரூராட்சியிலே பிறப்பிடச் சான்றிதழிலிருந்து, இறப்புச் சான்றிதழ் வாங்குற வரைக்கும் கமின் தந்தாதான் இதுமட்டுமா? குடிதண்ணீர் பைப் போடுவதற்கும், வீட்டு பிளான் அப்ருவலுக்கும் அதிகாரிகள கைக்குள்ள போட்டு கமின் பாக்குறதல கில்லாடி ராஜாவா வலம் வந்துகிட்டு இருக்குறாரு. ராஜா அரசு உயர்நிலைப்பள்ளியில தற்காலிகமாக உடற்கல்வி ஆசிரியாராக பணியில் இருக்கிறாரு. அந்தப்பணிக்கு இவரே இன்னொரு ஆள தற்காலிகமா பணியில அமர்த்திவிட்டு பேரூராட்சிக்குள்ள வந்து ஆட்டம்னா ஆட்டம் போடுறாரு.
பேரூராட்சி தலைவியே தன் கணவரே செயல்பட விடமாட்டிங்கிறாரு கயத்தாறு மட்டுமில்ல திமுக தலைமைக்கும் புகார் அனுப்பிட்டோம். நீங்க என்ன புகாரு வேணாலும் அனுப்புங்க எங்க அப்பா ஒன்றியச் செயலாளரை மீறி உங்க புகார் எடுபடாது. இப்ப சம்பாதிக்கலானா நாங்க எப்ப சம்பாதிக்கிறது என்று எகத்தாலுமர் பேசுறாரு ராஜா. நிர்வாக சீர்குலைவ வெளியே நாங்க பேசறதால கட்சியில நடக்குற நிகழ்சிச்சிகளைக் கூட எங்ககிட்ட சொல்றது இல்ல. அப்படியே சொன்னாலும் கூட எங்ககிட்ட மதிப்பும் கொடுக்கறது இல்ல. இப்படியெல்லாம் உங்க மகன் ராஜா செய்யறானு கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னப்பாண்டிக்கிட்ட நாங்க முறையாவும் சொல்லிப் பாத்தோம். அவர் காது கொடுத்துகூட கேக்கல. ஆனா.., சின்னப்பாண்டி கூட இருக்குற உடன் பிறப்பபுக்கிட்ட சின்னப்பாண்டியே! என் மகன் ராஜா செய்யறது எனக்க பிடிக்கல. ஊர்க்காரர்களுக்கு எப்படி பிடிக்கும். இதெல்லாம் அமைச்சர் கீதாஜீவனுக்கும், அக்கா கனிமொழிக்கும் தெரிஞ்சா எனக்கு தான் கெட்டபேரு என்று புழம்பி தள்ளிகிட்டு இருக்குறாரு சின்னப்பாண்டி. பாரதியார் பிறந்த மண்;, கட்டபொம்மபனைத் தூக்கிலிட்ட இடம் என்று தூத்துக்குடி மாவட்டத்தை யாராலும் மறக்க முடியாது இதெல்லாம் சரித்திரங்களே! ஆனால் இந்த சரித்திரங்களை கெடுக்கும் விதமாக எங்க பேரூராட்சி தலைவரின் கணவர் ராஜா செய்யற செயல்களை எப்படி முடிவுகளுக்கு கொண்டு வரப்போறம்னு எங்களுக்கு தெரியல என்றனர் விரக்தியாக.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து பேரூராட்சி தலைவி சுப்புலட்சமியின் கணவர் ராஜாவிடம் பேசினோம்.
புpடிக்காதவங்க ஆயிரம் குற்றச்சாட்டுகளை எங்க மீது திணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பேரூராட்சி நிர்வாகத்தை திறன்பட நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்றார். கழுவுற மீனில் நழுவுற மீனாக

ராஜா

ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் மனைவி சேர்மன் ஆனால் கணவர்களில் ஆதிக்கம் தான் நிர்வாகத்திற்கு…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *