சென்னையில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை குடும்பபிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என
விசாரணை.
மதுரையை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு திருமணமாகி உமா தேவி என்கிற மனைவியும், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் கடந்த, 2011-ம் ஆண்டு முதல் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். தற்போது எக்மோர் கெங்கு சாலையில் வசித்து வந்துள்ளார்.
ஆயுதப்படை காவலரான செந்தில்குமார் நேற்று வழக்கம் போல, தனக்கு ஒதுக்கப்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்க பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். கடந்த 13-ம் தேதி முதல் முக்கிய விஐபிகள் வரும் பகுதியில் பாதுகாப்பு பணியில் செந்தில்குமார் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் நன்பகல் 12 மணியளவில் உள்விளையாட்டு அரங்கில் உள்ள கழிவறை பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சக காவலர்கள், கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, காவலர் செந்தில்குமார், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வலதுபுற நெஞ்சில் தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டது தெரியவந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில்குமாரை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, கொண்ட செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
காவலர் மரணத்திற்கு காரணம் குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.