காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காணொலிவாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 14 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றுள்ளனர்.கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்,பாதுகாப்பு, நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு -முதல்வர் அவசர ஆலோசனை!
