பொறியியல் படிப்புகள் குறித்து அண்ணாபல்கலைக்கழகம் முக்கிய அறிப்பை வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதை தவிர்க்க,மருத்துவ கலந்தாய்வை போலவே பொறியியல் கலந்தாய்வையும் நடத்த அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. கலந்தாய்வின் போது ஒரு கல்லூரியை தேர்வு செய்யும் மாணவர்கள் வேறொரு கல்லூரியில் சேர்ந்து விட்டால் 7 நாட்களுக்குள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காலியான இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.