
இந்திய கொடி உயருவது போல விலைவாசியும் உயர்வதை சித்தரித்து பிரபல கார்ட்டூனிஸ்ட் வரைந்த கார்ட்டூன் வைரலாகி வருகிறது.
நமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் 15 வரை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் சுயவிவர படத்தில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் பிரதமரின் அறிவுரையை ஏற்று மக்கள் தேசிய கொடியை தங்கள் வலைத்தளங்களில் வைத்துவருகின்றனர், அதே நேரத்தில் விலைவாசியும் உயர்ந்து வருவதாக பதிவு செய்து வருகின்றனர். இதை சித்தரித்து பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ்ஆச்சார்யா வரைந்துள்ள கார்ட்டூன் வைரலாகி வருகிறது.
