• Wed. Dec 11th, 2024

தெலுங்கானாவில் பாடமெடுக்கும் ரோபோ.. ஆசிரியர்களின் நிலை என்ன..??

Byகாயத்ரி

Aug 3, 2022

தெலுங்கானா பள்ளிகளில் டீச்சருக்கு பதிலாக ரோபோ பாடம் சொல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஈகிள் ரோபோ என்ற இளம்பெண் போன்ற உருவம் கொண்ட பெண் ரோபோக்கள் தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தி வருகின்றன. இந்த ரோபோ ஒரு ஆசிரியர் எப்படி பாடம் எடுக்கின்றாரோ அதேபோல் துல்லியமாக படம் எடுத்து வருகின்றன. இதனை அடுத்து விரைவில் அரசு பள்ளிகளில் ரோபோ பாடம் நடத்தும் முறை அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக 5 மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் இந்த ரோபோ படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக ரோபோ பாடம் எடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டால் ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.