இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் ,சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து இபிஎஸ் தாக்கல்செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது.