உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் 55வயதான டாக்டர் சுஷில் சிங். இவரது மனைவி சந்திரபிரபா(50) மகன் ஷிகார் சிங் (21) மகள் குஷி சிங் (16).
இதற்கிடையில், கடந்த 3-ம் தேதி சுஷில் சிங் ’டீ’ யில் மயக்க மருத்து கொடுத்து மனைவி சந்திரபிரபாவை சுத்தியலால் அடித்தும், மகன் ஷிகார் சிங், மகள் குஷி சிங் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்தும் சுஷில் சிங் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
துர்நாற்றம் வீசியதால் பக்கத்தில் உள்ளோர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், இந்த கொலை தொடர்பாக சுஷில் சிங் எழுதிய கடிதத்தத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தான் குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் கூறிய சுஷில், ‘கொரோனா யாரையும் விட்டுவைக்காது. எனது குடும்பத்தை பிரச்சினையில் விட்டுவிட்டு செல்ல விரும்பவில்லை. அவர்களை விடுதலை செய்து பிரச்சினைகளில் இருந்து வெளியேற்ற விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய சுஷிலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில் சுஷில் சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கபட்ட நபர் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய டாக்டர் சுஷில் சிங் என்பது தெரியவந்துள்ளது.