தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்தட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன் மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர். கலையரசி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கால்நடைகள் சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பகுதிநேர கால்நடை மருத்துவமனையை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளதாக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்துள்ளார்.