

கடந்த 2ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த பாஜகவினர், கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் தங்களை விமர்சித்தாக கூறி வாயில் கருப்புத்துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி முறையான விளக்கமளித்தும், ஏற்காத பாஜகவினர் விரைவில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக கூறி வெளிநடப்பு செய்து கண்டன முழக்கமிட்டனர்.
