• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

May 27, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் வீரமலை உள்ளிட்ட தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவையொட்டி கோவனூர் சுவாமிநாத சர்மா தலைமையிலான சிவாச்சாரியார்கள் நான்கு கால பூஜை நடத்தினர்.

கணபதி பூஜை உடன் தொடங்கிய நான்கு கால பூஜையில் கோ பூஜை அணுக்கை பூஜை லட்சுமி பூஜை நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணா ஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. தொடர்ந்து புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. பக்தர்கள் ஹரி ஹரி கோவிந்தா என மனமுருகி வேண்டினர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.

பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவில் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலில் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இதில் சோழவந்தான் தேனூர் கொடிமங்கலம் தச்சம்பத்து திருவேடகம் மேலக்கால் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேனூர் முடுவார்பட்டி தேவசேரி பங்காளிகள் மற்றும் பெண்ணடி வாரிசுகள் செய்திருந்தனர்.