
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதியில் ஜியோ நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் டவர் சுமார் 80 அடி உயரமானது.
இதில் இன்று மாலை மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சார வாரிய அலுவலர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்ததும் தீ தானாகவே அனைந்தது.
இதனால் அப்பகுதியில் ஜியோ செல்போன் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில்
பாதிப்படைந்த ஜியோ செல்போன் டவரை நிறுவனத்தினர் சீரமைப்பதற்க்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.