தென்காசி பகுதிகளில் ஆட்டோக்களை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது.
தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 30 ஆட்டோக்கள் உடைப்பு மற்றும் 4 ஆட்டோக்களில் செட்கள் காணாமல் போனது .

இது சம்மந்தமாக சம்பந்தப்பட்ட எதிரியை கண்டுபிடிக்க தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்களின் உத்தரவின்படி தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமாறன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் தென்காசி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து, சீவலமுத்து , தலைமை காவலர் கார்த்திக் காவலர்கள் திரு.சதாம் உசைன் , திரு.கற்பகசுந்தரபாண்டி ஆகியோர் CCTV கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து சுமார் 24 மணி நேரத்திற்குள் எதிரியை கண்டுபிடித்து எதிரியிடம் இருந்து காணாமல் போன இருசக்கர வாகனம் மற்றும் 4 ஆட்டோ செட்கள் மீட்கப்பட்டு குற்றவாளிகள் முறைப்படி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்..
இதில் குற்றவாளியை கண்டு பிடிக்க பெரும் உதவியாக இருந்த தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் அவர்களுக்கு மிகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .