

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த நாட்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் திருவிக நகர் மற்றும் தேவர்குளம் பகுதிகளில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பார்வையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவிகள் வழங்கினார்.

மேலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சேதமடைந்துள்ள வீடுகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
