பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு முன்பே உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தண்ணீரை திறந்து விட்டதை கண்டித்து தேனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பெரியகுளத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் ,முன்னாள் துணை முதல்வருமான பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் .
பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக நாளை அதிமுக சார்பில் கம்பத்தில் மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தேனியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்துவிட்டு, தற்போது அண்ணாமலை ஓபிஎஸ் அவர்களை சந்தித்த இந்த சம்பவம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,