• Sat. Apr 20th, 2024

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!..

Byமதி

Oct 25, 2021

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகம் மற்றும் அஸ்தம்பட்டி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையில் 500க்கும் மேற்பட்ட இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், துறையில் உள்ள காலி பணியிடங்களை ஒப்படைத்து ஊழியர் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்றும், மாதா மாதம் ஊதியம் வழங்க ஆணை வழங்குவதை தவிர்த்து ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றும், பட்டு வளர்ச்சிக்கு பொருந்தாத பல திட்டங்களை கைவிட்டு மாநில திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் நலன் கருதி குறைக்கப்பட்ட மாநில திட்டங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *