இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பலவேறு பகுதிகள் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தற்போது, கேரளாவைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் கனமழையும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 224 வீடுகள் சேதமடைந்தன. மீட்புப்பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை விரைவுப்படை, மாநில போலீசார் ஈடுபடுத்தப்பட்டன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி இதுவரை 72 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன. இன்னும் மழை தொடர்ந்து பெய்வதால் மீட்புபணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.