திருவல்லிக்கேணி சென்னை மாநகராட்சியின் மிகவும் பரபரப்பான பகுதியாகும்.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் கோயில், மசூதி, சர்ச், பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் ஆகியவைகளுக்கிடையே பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றிலும் முகம் சுளிக்கும் வகையில் அரசு டாஸ்மார்க் மதுபானக்கடை எண்: 812 செயல்பட்டு வருகிறது. மதுகடை இங்கு செயல்படுவதால் இது பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் இடையூறை ஏற்ப்படுத்துகிறது.
எனவே இப்பகுதி பெண்கள், மாணவ – மாணவிகள், வணிகர்களின் நலன் கருதி இந்த மதுபானக் கடையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றித் தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.